கொரோனாவுக்கு பாலிவுட் நடிகை பலி
ADDED : 1660 days ago
பிரபல பாலிவுட் நடிகை அபிலாஷா பாட்டில். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோர் படத்தில் நடித்திருந்தார். துஜா மஞ்சா, அரேன்ஞ்சுடு மேரேஜ், பேக்கோ டெட்டா கா பேகோ, பிப்ஸி உள்ளிட்ட பல மராட்டிய படங்களிலும் நடித்துள்ளார்.
40 வயதான அபிலாஷா பாட்டிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி உயிரழந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட், மற்றும் மராட்டிய நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.