உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுனுக்கு கொரோனா நெகட்டிவ்

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா நெகட்டிவ்

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் ஆகியோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. நடிகர் பவன் கல்யாண் ஐதராபாத் புறநகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து குணமடைந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுன், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என அவர் அறிவித்துள்ளார்.

“15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ். ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த ஊரடங்கு கேஸ்களை இன்னும் குறைக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கிறேன். வீட்டில் பத்திரமாக இருங்கள், உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜுனியர் என்டிஆர் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !