‛ஆடை' இயக்குனரின் குடும்பத்தினர் 14 பேர் கொரோனாவால் பாதிப்பு
ADDED : 1636 days ago
மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர் ரத்ன குமார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனைக்கு சென்று தேறினர். கடந்த 20 நாட்களாக மன உளைச்சல்களை கடந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு'' என பதிவிட்டுள்ளார்.