உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவுக்கு கமல், சித்ரா வாழ்த்து

இளையராஜாவுக்கு கமல், சித்ரா வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், ‛மேஸ்ட்ரோவிற்கு பிறந்தநாள் வாழ்த்து என்றும், பின்னணி பாடகி சித்ரா, இளையாராஜா இசையில் அவர் பாடிய பாடலை பாடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

சித்ரா வாழ்த்து

பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்தில்... ‛‛இன்னைக்கு இசைஞானி இளையராஜா சாரோட பிறந்தநாள். சார், இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். நீங்க எனக்கு ஒரு குருவா, ஒரு அப்பாவோட இடத்துல இருந்து, ஆலோசனைகள் கொடுத்து, என்னை வழி நடத்துனீங்க. உங்களைப் பார்த்து ரொம்ப நாளாகுது. இந்த கோவிட்னால ஒருத்தருக்கொருத்தர் பார்க்க முடியலை. இந்த ஒரு தருணத்துல உங்களுக்கு தீர்க்காயுசும், ஆரோக்கியமும் நல்லிசையும் எல்லாம் கடவுள் அள்ளிக் கொடுக்கணும்னு நானும் பிரார்த்திக்கிறேன். இன்னும் நூறு வருஷம் உங்க இசைப்பயணம் வெற்றிகரமா அமையணும். உங்க இசையில நான் பாடின ஒரு பாட்டு உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்,” என “கிழக்கு வாசல்” படத்திலிருந்து வந்ததே ஓ..குங்குமம்.. என்ற பாடலைப் பாடியுள்ளார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !