எஸ்பிபிக்கு சிலை : தினா வேண்டுகோள்
ADDED : 1585 days ago
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இன்று(ஜூன் 4) கொண்டாடினார். மேலும் அவரைப்பற்றிய பல நினைவுகளையும் பகிர்ந்தனர். இதனால் எஸ்.பி.பி. பிறந்தநாள் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில் இசையமைப்பாளர் தினா இன்ஸ்டாவில், ‛‛எஸ்பிபியின் 75 பிறந்தநாளை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தி வணங்குகிறோம். தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள். அண்ணாரின் உருவ சிலையை சென்னையில் நிறுவ வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.