'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு...' - கமல்
ADDED : 1688 days ago
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் 75வது பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன். எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு...' '' என பதிவிட்டு அவருடன் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடிய ஒரு பழைய போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.