ரூ.10.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சூரி
ADDED : 1585 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தன் சார்பில் ரூ.10 லட்சமும், தனது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.10.25 லட்சத்திற்கான காசோலையை நடிகரும், திமுக., எம்.எல்.ஏ.வுமான உதயநிதியை சந்தித்து வழங்கினார் சூரி.