உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை யாமி கவுதம் திடீர் திருமணம்

நடிகை யாமி கவுதம் திடீர் திருமணம்

தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் நடித்து வருபவர் யாமி கவுதம். தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர், திடீரென இன்று(ஜூன் 4) திருமணம் செய்து கொண்டார்.


ஹிந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம் செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

இதுப்பற்றி யாமி டுவிட்டரில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் தேவை என பதிவிட்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகை பிரணிதா சுபாஷ் திடீரென திருமணம் செய்தார். இப்போது யாமியும் சத்தமின்றி திடீரென தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !