உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதாநாயகியாக 30 ஆண்டுகள் : மீனா மகிழ்ச்சி

கதாநாயகியாக 30 ஆண்டுகள் : மீனா மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்து கதாநாயகியாக வளர்ந்து ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற கதாநாயகியாக விளங்கியவர் மீனா.

ஆனால், தெலுங்கில் தான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆனதால் திரையுலகில் கதாநாயகியாக தன்னுடைய 30 வருடப் பயணம் பற்றி ஒரு சிறு வீடியோவைப் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனா.

“காலம் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. நாயகியாக என்னுடைய முதல் படம் நவயுகம், இன்னும் ஞாபகம் வைத்துள்ளேன். நான் செய்த பல வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பற்றியும், அவற்றில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றியும், திரும்பிப் பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. இவை நடக்கக் காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றியுடன் இருப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழில் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்திலும், தெலுங்கில் வெங்கடேஷுடன் 'த்ரிஷயம் 2' படத்திலும் நடித்து முடித்துள்ளார் மீனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !