ராயல் என்பீல்டில் அதிரடி காட்டும் கீர்த்தி பாண்டியன்
ADDED : 1549 days ago
தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண்பாண்டியனின் மகளான இவர் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வருகிறார். சமீபத்தில்கூட சொந்த ஊரான பாளையங் கோட்டையில் விவசாயம் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது ராயல் என்பீல்டு பைக் ஓட்டும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். அதில், படுவேகமாக பைக்கை ஓட்டிச்செல்வதோடு நின்று கொண்டு, ஒரு கையை விட்டபடி ஓட்டியும் சாகசம் செய்து அசத்தியிருக்கிறார்.