அர்ச்சனாவுக்கு தலையில் ஆபரேஷன்
ADDED : 1549 days ago
டிவி தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது படங்களிலும் நடிக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இயங்கி வந்த இவர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில், ‛‛எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படும் பெண் நான். அதனால் என் மூளை கோபமாகி என் இதயத்தை விட அது வலிமையானது என காட்ட விரும்புகிறது. என் மண்டை ஓட்டில் மூளைக்கு அருகே செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கும் சூழல். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி மீண்டும் வருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அர்ச்சனா தெரிவித்துள்ளார்.