உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு வாய்பளித்த இமான்

மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு வாய்பளித்த இமான்



தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இமான். ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், இப்போது கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடுகிறார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் தான் இவர்களை பாட வைக்கிறார் இமான். இதுப்பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இமான்.

தான் இசையமைத்த அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி சமூகவலைதளங்களில் பிரபலமானார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இவரது திறமையை பார்த்து ஜீவா நடிப்பில் தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட வாய்ப்பு அளித்தார் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !