மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1523 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1523 days ago
டப்ஸ்மாஷ், டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்கள் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். 11 ஆண்டுகால சினிமா போராட்டத்தில் கடுமையாக உழைத்து முன்னேறி இன்ஸ்டா ரீல்ஸ்களில் தெறிக்கவிடும் சரவணவேல் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் நண்பராக நடித்துள்ளார். இன்று சமுக வலைதளங்களில் கபிலனுக்கு கவுதமன் இருப்பது போல் நல்ல நண்பனை வாழ்வில் சம்பாதித்தால் போதும் என்ற வாசகங்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த அளவிற்கு கவுதமன் கதாபாத்திரம் மக்களிடம் சென்றுள்ளது.
அவர் தினமலர் வாசகர்களுக்காக கூறியதாவது... சொந்த ஊர் ஈரோடு. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை. இன்ஜினியரிங் முடித்த பின் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 2011ல் குறும்படங்களில் நடிக்க துவங்கினேன். இயக்குனர் ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பல்வேறு காரணங்களால் கை நழுவி போனது. அப்போதே ரஞ்சித் பாக்ஸிங் பற்றி படம் பண்ண வேண்டும், உனக்கும் அதில் கதாபாத்திரம் உண்டு என கூறி இருந்தார். சூழல் அமையாததால் அப்போது துவங்க முடியவில்லை. நானும் வேறுபடங்களில் விடாமுயற்சியுடன் வாய்ப்பு தேடினேன்.
நானும் ரவுடிதான், கனா, சென்னை 28 பாகம் 2, மாநகரம், வேலையில்லா பட்டதாரி 2 உட்பட பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தேன். எதேச்சையாக துவங்கிய டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் மக்களிடம் என்னை அறிமுகப்படுத்தியது. சமூக கருத்துக்கள் நிறைந்த பதிவுகளை வெளியிட்டதில் மக்களிடம் பாராட்டுக்கள் கிடைத்தது. சினிமா வட்டாரத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
காலா படத்திற்கு பிறகு பாக்சிங் பற்றி படம் எடுக்கப் போவதாக ரஞ்சித் என்னை அழைத்தார். 10 வருட போராட்டத்திற்கு பிறகு சார்பட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. மெட்ராஸ் பாஷை தெரியும் என்பதால் இப்படத்தில் நடிப்பது எளிதாக இருந்தது. இது நம்ம காலம் கபிலா, எதிர்ல நிக்குறவன் கெலுகெலுத்து போவனும், நம்மள மாதிரி ஆட்களுக்கு எப்பவாவது தான் வாய்ப்பு வரும்! விட்றாத கபிலா போன்ற வசனங்கள் என்னை மக்களிடம் அடையாளம் காட்டின.
வத்திக்குச்சி பட இயக்குனரின் அடுத்த படம், எடிட்டர் சிவா இயக்கத்தில் ஒரு படம் என புதிய படங்களில் நடிக்கிறேன். சினிமாவிற்கு முயற்சிக்கும் இளைஞர்கள் திறமையாகவும், பொறுமையாகவும் வேலை செய்யுங்கள். உழைப்பவர்கள் ஒரு போதும் தோற்பதில்லை, என்றார்.
1523 days ago
1523 days ago