எடையோ 44 கிலோ... உடையோ 58 கிலோ...
ADDED : 1521 days ago
பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்து புகழ் பெற்றவர் எஸ்தர் அனில். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது குமரியாகிவிட்டார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை பகிர்வார். இப்போது ஒரு கிராண்ட் ஆன கவுன் ஆடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛‛என் எடை 44 கிலோ தான். ஆனால் ஆடையின் எடையோ 58 கிலோ. இதை முதன்முதலாக பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அதை அணிந்த பின் அழகாக இருக்கிறேன், என மகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார் எஸ்தர்.