சிம்பு படப்பிடிப்பில் சமைத்து அசத்திய ஆர்ட் டைரக்டர் ராஜீவன்
ADDED : 1520 days ago
கவுதம் மேனன், சிம்பு கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் படம் வெந்து தணிந்தது காடு.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இனி அடுத்ததாக எப்போது வேண்டுமானாலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படலாம் என்கிற சூழல் நிலவுவதால் படப்பிடிப்பை மும்முரமாக நடத்தியுள்ளார் கவுதம் மேனன்.
அந்தவகையில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற படப்பிடிப்பில் இந்தப்படத்தில் பணியாற்றும் பிரபல கலை இயக்குனரான ராஜீவன், தானே மாஸ்டராக களம் இறங்கி சில ஸ்பெஷல் அயிட்டங்களை சமைத்து படக்குழுவினரை அசத்தியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மதிய உணவு நேரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இந்த தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ராதிகா சரத்குமார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறார் ராதிகா.