மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1459 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1459 days ago
5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் வாஸ்கோடகாமா படத்தை மலேசியாவை சேர்ந்த டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார். நகுல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கே. எஸ்.ரவிக்குமார், முனிஸ்காந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நாயகி தேர்வு நடந்து வருகிறது. ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.
சமீபகாலமாக ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவைகளை பல பிரபலங்கள் ஒரே நேரத்தில் வெளியிடும் டிரெண்ட் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை போஸ்டரை விநாயகர் சதுர்த்தியான இன்று(செப்., 10) நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ,அதுல்யா ரவி, சுபிக்ஷா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ராம்குமார், இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் உள்ளிட்ட 100 பேர் காலை 10 மணி 10 நிமிடத்திற்கு வெளியிட்டனர். இதுவரை திரையுலகம் காணாத புதுமையான நிகழ்வு இதுவாகும்.
இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் கூறுகையில், படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே வாஸ்கோடகாமா என பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும், குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம் தான் இது என்றார்.
1459 days ago
1459 days ago