வெப் சீரிஸில் ‛தேன்' நடிகர் தருண்குமார்
ADDED : 1505 days ago
தேன் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தருண் குமார். ஏற்கனவே சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். தருண்குமார் அளித்த பேட்டி: இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறேன். ஏ.வி.எம்., நிறுவனத்தின் வெப்சீரிஸிலும் நடிக்கிறேன். எதிர்காலத்தில் சினிமா அளவுக்கு வெப்சீரிஸும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்றார்.