தலைநகரம் 2 உருவாகிறது
ADDED : 1533 days ago
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு நடிப்பில் உருவான ‛தலைநகரம்' படம் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சுந்தர்.சியே நாயகனாக தொடருகிறார். வி.இசட்.துரை இயக்குகிறார். ‛இருட்டு' படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(செப்., 23) துவங்கியது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. முதல் பாகத்தை போலவே வடிவேலு நடிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.