மீண்டும் ‛சில்க்'
ADDED : 1487 days ago
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ‛சில்க்' என்ற பெயரில் அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் புதிய படம் ஒன்றை இன்று துவக்கியுள்ளனர். இப்படத்தில் நாயகனுக்கு நான்கு ஜோடிகளாம். நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது. இப்படத்தில் கோபி கிருஷ்ணா இயக்குனராக அறிமுகமாகிறார். காதல், காமெடி கலந்த படமாக ‛சில்க்' உருவாகிறது. தமிழ் திரையுலகில் இன்றளவும் கனவுக்கன்னியாக இருக்கும் சில்க் ஸ்மிதாவின் இடத்தை இன்னும் யாராலும் நிரப்ப முடியவில்லை. ஆனால் அவரை வைத்து நிறைய பேர் படம் உருவாக்கி, காசு பார்த்து விடுகின்றனர். அந்த வகையில் இந்தப்படம் எந்த வகையில் இருக்குமோ!