ஆன்டி இண்டியன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைத்தது
ADDED : 1488 days ago
சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள படம் ஆன்டி இண்டியன். புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படம் அரசியல் நையாண்டி படமாக தயாராகி உள்ளது. படத்தை கடந்த ஏப்ரல் மாதம் தணிக்கை குழுவினர் பார்த்தனர். படத்தின் தலைப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த படமும் அரசை அவதூறு செய்வதாக உள்ளது என்று கூறி தணிக்கை சான்றிதழ் தர மறத்து விட்டனர்.
அதன் பிறகு படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். பின்னர் சில காட்சிகளை நீக்க வேண்டும், சில வசனங்களை மியூட் செய்ய வேண்டும். குறிப்பாக படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்கிற நிபந்தனையோடு படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் அடுத்த மாதம் வெளிவரும் என்று தெரிகிறது.