3வது முறையாக விஷாலுடன் இணையும் பிரபு
ADDED : 1470 days ago
அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே தாமிரபரணி, ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு எடை குறைத்து இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.