பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் ராஷி கண்ணா
ADDED : 1456 days ago
ராஷி கண்ணா தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் இங்கே முன்னணி நடிகையாக வளர துவங்கியுள்ளார். அதோடு தற்போது மலையாளத்தில் இருந்தும் பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. அந்தவகையில் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் மலையாள ரீமேக்கான 'பிரம்மம்' என்கிற படத்தில் பிரித்விராஜ் ஜோடியாக நடித்துள்ளார் ராஷி கண்ணா. நேற்று இந்தப்படம் வெளியாகியுள்ளது.
பிரித்விராஜுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ராஷி கண்ணா, “லூசிபர் என்கிற மிகப்பெரிய படத்தை இயக்குவதற்கு தகுதியான நபர் தான் என்பதை, பிரித்விராஜ் தான் நடித்த காட்சி ஒவ்வொன்றிலும் நிரூபித்தார். அவர் எப்போது பேசினாலும் சினிமாவை பற்றியே அவரது பேச்சு இருக்கும். என்றாவது ஒருநாள் அவரது டைரக்சனில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை” என கூறியுள்ளார் ராஷ் கண்ணா.