அண்ணாத்த-வின் அடுத்த பாடல் ரெடி
ADDED : 1457 days ago
சிவா இயக்கத்தில ரஜினி, நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி என பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஜினிக்காக மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி., பாடிய முதல் பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், காப்பி சர்ச்சையும் எழுந்தது.
இந்தநிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 9-ந்தேதியான நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரக்காற்றே என்று தொடங்கும் அந்த பாடலை சித் ஸ்ரீராம்- ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். ரஜினி - நயன்தாரா பாடுவது போன்று இடம் பெற்றுள்ள அந்த பாடலின் ஸ்டில் ஒன்றையும் பட நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.