ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு
ADDED :2189 days ago
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டிவலசு, பிரசித்தி பெற்ற சுயம்பு ஸ்ரீமாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, நாளை 24ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. 28ல் இரவு, 7:00 மணிக்கு கம்பம் நடுதல், 30ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஜன.,7ல் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், 8ம் தேதி நடக்கவுள்ளது. தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. 9ம் தேதி காலை, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, 11ம் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.