உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் - ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

கிருஷ்ணர் - ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

திருப்போரூர்:திருப்போரூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், நடைபெற்றது.திருப்போரூர் கிரிவலப்பாதையில், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி கடைசி நாளில், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்.அந்த வகையில், நேற்று, கிருஷ்ணர் - ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடைபெற்றது. விழாவை ஒட்டி, சிறப்பு யாகசாலை பூஜை, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !