முருகன் கோவில் புனரமைப்பு நிலைகல் வைத்து சிறப்பு பூஜை
ADDED :2129 days ago
பந்தலுார்:பந்தலுார் முருகன் கோவில் புனரமைக்கும் பணியில், நிலை கல் வைத்து சிறப்பு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.பந்தலுார் பஜாரில் பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. அதில், நேற்று காலை நிலைகல் வைத்து பூஜை செய்யும் பணி நடந்தது. கோவில் கமிட்டி தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.கோவில் குருக்கள் தலைமையிலான குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டு, அதன் மேல் நிலைகல் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் கமிட்டி செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ், முத்து ஸ்தபதி மற்றும் கோவில் கமிட்டியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.