உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்

பிரசாதம் இது பிரமாதம்

கந்தர் அப்பம்


தேவையானவை:
பச்சரிசி–250 கிராம்,
உளுந்து–50 கிராம்,
துவரம் பருப்பு–50 கிராம்,
வெந்தயம் –  சிறிதளவு,
தேங்காய்–1/2  முடி,
வெல்லம்–1/4 கிலோ,
ஏலக்காய் பொடி–சிறிது,
உப்பு – தேவையான அளவு

எண்ணெய் –  தேவையான அளவு


செய்முறை:  அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய், வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து எண்ணெயில் மெதுவாக ஊற்றவும்.  வெந்த பின், திருப்பி விட்டு அரை நிமிடத்தில் எடுக்கவும். சூடான சுவையான கந்தரப்பம் தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !