உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் திருவிழா ஒத்திவைப்பு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் திருவிழா ஒத்திவைப்பு

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டைய திருவிழா, வரும், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அடுத்த மாதம், 8ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவில் செயல் அலுவலர் லோகநாதன் அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, மத்திய அரசால், 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு செயலர் ஆகியோர், திருக்கோவில்களில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். எனவே, தற்காலிகமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத்தேர் திருவிழா, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !