உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆமாம் சாமி யாரு தெரியுமா?

ஆமாம் சாமி யாரு தெரியுமா?

ஒருவர் சொல்லும் விஷயத்தை இன்னொருவர் ஆமோதித்தால், இவரு சரியான ஆமாம் சாமி என்று வேடிக்கையாக சொல்வோம் இல்லையா? முதன் முதலில் ஆமாம் போட்டதே ஒரு சாமி தான்! அவர் தான் குருவாயூரப்பன். அவர் ஆமாம் சாமி போட்ட கதையைக் கேளுங்க!

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த, கிருஷ்ண பக்தரான நாராயண பட்டத்திரி எழுதிய நூல் நாராயணீயம். 1000 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல், நாராயணனின் பெருமையை கூறுகிறது.  பாகவதத்தில் இடம் பெற்றுள்ள கிருஷ்ண வரலாறு முழுவதும் இதில் உள்ளது. ஒவ்வொரு கதையையும் எழுதும் போதும் குருவாயூரப்பனிடம், உன் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்தது உண்மையா? என்று பட்டத்திரி கேட்க, குருவாயூரப்பனும் ஆமாம் என்ற தலை யசைத்தார். இதனால் இவர் ஆமாம் சாமி ஆனார். பக்தி என்னும் பாலும், ஞானம் என்னும் கற்கண்டும் கலந்த நாராயணீயத்தை  பாராயணம் செய்தால் உடல் நோயும், உள்ளத் தளர்வும் நீங்கி ஆரோக் கியம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !