பிரசாதம் இது பிரமாதம்
ADDED :2257 days ago
பஞ்சாமிர்தம்
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் அல்லது மலைப்பழம் - 6,
பேரீச்சை - 20
உலர் திராட்சை - கால் கப்
தேன் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - அரை கப்
பனங்கற்கண்டு - கால் கப்
ஏலக்காய் - 2
செய்முறை :
பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கவும். ஏலக்காயை பொடியாக்கிக் கொள்ளவும். வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் போட்டு பிசையவும். பின்னர் நெய் சேர்த்துக் கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்கு அபிேஷகம் செய்யவோ அல்லது பிரசாதமாக படைக்கவோ செய்யலாம். கையால் பிசைந்த பஞ்சாமிர்தம் ஒருநாள் மட்டுமே தாங்கும். கை படாமல் தயாரித்தால் மூன்று நாள் வரை கெடாது.