உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் மழலைக்குரல் ஒலிக்க....

வீட்டில் மழலைக்குரல் ஒலிக்க....

திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலை தினமும் பாடுங்கள்

பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி
ஏத்தாதார்  இல்லை எண்ணுங்கால்
ஓத்துார் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே.

இடைஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே புள்ளிமான் உரி
உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்துார்ச்
சடையீரே உமதாளே.

உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்துார்க்
கள்வீரே உம காதலே.

தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்துார்
நாட்டீரே அருள் நல்குமே.

குழை ஆர் காதீர் கொடுமழுவாள் படை
உழை ஆள்வீர் திருஓத்துார்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே.

மிக்கார் வந்து விரும்பிப்பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ திருஓத்துார்
நக்கீரே அருள் நல்குமே.

தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ திருஓத்துார்
ஆதீரே அருள் நல்குமே.

என்தான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்துார்
என்றார் மேல்வினை ஏகுமே.

நன்றா நால்மறையானொடு மாலும்ஆய்ச்
சென்றார் போலும் திசைஎலாம்
ஒன்றாய் உள்எரிஆய் மிக ஓத்துார்
நின்றீரே உமை நேடியே.

கார்அமண் கலிங்கத் துவர் ஆடையர்
தேரர் சொல் அவை தேறன்மின்
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்துார்ச்
சீரவன் கழல் சேர்மினே.

குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்துார்
அரும்பு கொன்றை அடிகளை
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !