கன்னியாகுமரி அம்மன் அலங்காரத்தில் கோமதி அம்மன் அருள்பாலிப்பு
ADDED :1854 days ago
மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நவராத்திரி 7ம் நாள் விழாவில் கன்னியாகுமரி அம்மன் அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.