உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகிர்ந்து கொடுங்கள்

பகிர்ந்து கொடுங்கள்


* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.
* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.
* பிறருக்கு கொடுங்கள்; உங்களுக்கும் கொடுக்கப்படும்.
* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்.
* வேண்டுதல்களும், இரக்கச் செயல்களும் ஆண்டவரைச் சென்றடையும்.
* உடலுக்கு தீங்கு நேராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.
* நல்ல பிள்ளைகள் தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.
* பெற்றோருக்கு கொடுமை செய்பவன் கேட்டிற்கு ஆளாவான்.
* வாழ்வின் எந்த நிலையில் திருப்தியை இழக்காதீர்கள்.
* சக்தியும், அன்பும், அமைதியும் கொண்டவராக இருங்கள்.
* எல்லாவற்றையும் ஆய்வு செய்து நல்லதை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
* நல்லவர்களை ஆண்டவர் வருத்தத்திற்கு ஆளாக்க மாட்டார்.
* நேர்மை தவறாத எவனும் பத்திரமாக வாழ்வான். தீமை அவனைத் தீண்டாது.
* நல்ல முறையில் கடனைத் திருப்பித் தருபவரே உண்மையில் மேலானவர்.
* நற்குணம் உள்ளவர்கள் பூமியில் பாக்கியங்களுடன் நீண்ட காலம் வாழ்வர்.
* கெட்டவர்கள் தான் செய்யும் தந்திரங்களில் தாங்களே அகப்பட்டுக் கொள்வர்.
– பைபிள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !