உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்டூர் கோவிலில் வைகாசி பெருவிழா

செண்டூர் கோவிலில் வைகாசி பெருவிழா

மயிலம் : செண்டூர் கிராமத்தில் பாவந்தீர்த்தம்மன் கோவில் வைகாசி பெருவிழா நடந்தது. மயிலம் அடுத்த செண்டூர் கிராம குளக்கரையில் உள்ள பாவந்தீர்த்தம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி காலை 9 மணிக்கு 108 வகை யான வாசனை திரவியங்களினால் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 3 மணிக்கு கிராம பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு 7,30 மணிக்கு அம்மனுக்கு திருக் கல்யாண உற்சவம் நடந்தது. இரவ 9 மணிக்கு அம்மன் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா நடந் தது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !