அம்மனை ஆயி மகமாயி என்கிறார்கள். அதன் பொருள் என்ன?
ADDED :4873 days ago
ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள் என்று அம்பாளைப் போற்றுவர். ஆயி என்றால் உயிர்களுக்கெல்லாம் தாய் என பொருள். உலகத்தையே கண்காணிக்கும் பார்வை அவளுக்கு இருக்கிறது. இதனால், கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி, ஆயிரம் கண்ணுடையாள் என்றெல்லாம் குறிப் பிடுவர். பாரதியார் பராசக்தியை, எங்கெங்கு காணினும் சக்தியடா என்று போற்றுகிறார். மாயவனின் தங்கையாக இருப்பதால் அவளுக்கு மாயி மகமாயி என்ற பெயர்களும் உண்டு.