திருப்பரங்குன்றத்தில் பெற்றோரை வரவேற்றார் சுவாமி: இன்று திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. இன்று(மார்ச் 31) காலை 11:30 முதல் 11:45 மணிக்குள் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் காலை 11:30 முதல் 11:45 மணிக்குள் நடக்கிறது. பங்குனித் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்படத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணிய சுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து, கோயில் ஒடுக்க மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். காலை 11:30 முதல் 11:45 மணிக்குள் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.