உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருப்பதை பிறருக்கு பகிர்ந்தளியுங்கள்

இருப்பதை பிறருக்கு பகிர்ந்தளியுங்கள்


தேவைக்கும் அதிகமாக ஆசைப்பட்டு இச்சைக்கு ஆளானவர்கள் பேராசையால் அவதிப்படுவர்.  அதன் முடிவு பெரும்நஷ்டமாக இருக்கும்.  
 மலை மீது புதையல் இருப்பதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் மூவர் மலைக்குச் சென்றனர். மலையேறியதால் இருவருக்கு சோர்வு ஏற்பட, ஒருவரை மட்டும் அடிவாரத்திற்குச் சென்று உணவு வாங்கி வர அனுப்பினர். உணவு வாங்கி வரும் நண்பனைக் கொன்று விட்டு தாமே புதையலை அடையலாம் என சதி ஆலோசனை செய்தனர். திட்டமிட்டபடியே அவனைக் கொன்றனர்.  
சிறிது நேரத்தில் நண்பன் வாங்கி வந்த உணவை இருவரும் சாப்பிட, வாயில் இருந்து நுரை தள்ளி இறந்தனர். ஏனெனில் உணவு வாங்கி வந்தவன், மற்ற இருவரையும் கொன்றுவிட்டு புதையலை தானே எடுக்க எண்ணி உணவில் விஷம் கலந்திருந்தான். மூவரும் பேராசையால் உயிரை விட்டனர். பேராசை ஆபத்தைத் தரும்.
 பிறருடைய பணம், பொருள், நிலத்தை அபகரித்தால் ஆபத்து உண்டாகும். தேவைக்கு அதிகமாக இருப்பதை பிறருக்கு பகிர்ந்தளியுங்கள். அப்படி செய்தால் நம் தேவைகளை ஆண்டவர் நிறைவேற்றி வைப்பார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !