நெல்லை லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் ராதா கிருஷ்ணன் கல்யாணம்
ADDED :4858 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண மஹோத்ஸவம் கோலாகலமாக நடந்தது. நெல்லை டவுன் மேலமாடவீதி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு நேற்று காலை அஷ்டபதி பஜனை, சம்ப்ரதாய பஜனை, திவ்ய நாமம் பஜனை நடந்தது. தொடர்ந்து ராதை-கிருஷ்ணன் மாங்கல்ய தாரணம் நடந்தது. சேரன்மகாதேவி வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ராதை கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு லெட்சுமி நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், விஷேச திருமஞ்சனமும் நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ண கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.