திருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு
ADDED :1572 days ago
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையராக நெல்லை மண்டல இணை ஆணையர் அன்புமணி பொறுப்பேற்றார். திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐஏஎஸ் அதிகாரியான விஷ்ணுசந்திரன் செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நெல்லை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையராக பதவி வகித்து வரும் அன்புமணி திருச்செந்துார் கோயிலுக்கு இணை ஆணையராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று மாலை திருச்செந்துார் கோயில் இணை ஆணையராக பதவியேற்ற அன்புமணியிடம், செயல்அலுவலர் விஷ்ணுசந்திரன் கோப்புகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியின் போது கோயில் உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.