லலிதா சகஸ்ரநாமம் சொன்னவர்!
ADDED :1670 days ago
மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களில் ஞானத்திற்கான வடிவம் ஹயக்ரீவர். ஹயம் என்றால் குதிரை. க்ரீவம் என்றால் கழுத்து. குதிரை முகம் தாங்கிய வடிவத்திற்கு ஹயக்ரீவர் என்று பெயர். சிவாலயங்களில் ஞானவடிவமாக தென்முகக்கடவுளாகிய தட்சிணாமூர்த்தி இருப்பதுபோல், பெருமாள் கோவில்களில் ஹயக்ரீவர் ஞான தெய்வமாக விளங்குகிறார். இவரே சர்வ வித்தைகளுக்கும் ஆதாரமானவர். சரஸ்வதிக்கு குருவும் இவரே. ஆச்சார்யார்களில் ஒருவரான நிகமாந்த தேசிகருக்கு உபாசனா மூர்த்தியாக இருந்தார்.அகத்திய முனிவருக்கு லலிதா திரிசதியையும், லலிதா சகஸ்ரநாமத்தையும் உபதேசித்தார். மாணவர்கள், பேச்சுத்திறன் விரும்புவோர், பேச்சு குறைபாடுடையோர் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.