உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

திருநெல்வேலி கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

திருநெல்வேலி: 55 நாட்களுக்கு பின் கோயில்களில் பக்தர்கள் இன்று (5ம் தி) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவல் ஊரடங்கு காரணமாக கடந்த 55 நாட்களாக பக்தர்கள் கோயில்களுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நித்ய பூஜைகள் மட்டுமே பக்தர்களின்றி நடந்து வந்தது. கொரோனாவல் குறைந்த நிலையில் பக்தர்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் கோயில்கள் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும் தண்ணீர் கொண்டும் சுத்தம் செய்யும் பணியில் கோயில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 55 நாட்களுக்கு பிறகு கோவில் திறப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !