சதுரகிரி கோயிலில் பிரதோஷம் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :1532 days ago
வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. தாணிப்பாறை மலையடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 7:00 மணிக்கு வனத்துறை கதவு திறந்து உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 11:30 மணி வரை 2 ஆயிரம் பக்தர்கள் மலையேறினர். மலைப்பாதையில் குறுக்கிடும் ஓடைகளில் குறைந்தளவு நீர்வரத்து இருந்ததாலும் தீயணைப்புத்துறையினர் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். தரிசனம் செய்து திரும்பிய பக்தர்களுக்கு குன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கொரோனா டெஸ்ட் எடுத்தனர். ஜூலை 24 வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட உள்ளனர்.