உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமி தரிசனத்திற்கு தடை; வருவாய் இழப்பில் கோயில் கடைகள்

சாமி தரிசனத்திற்கு தடை; வருவாய் இழப்பில் கோயில் கடைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் போதிய வருவாய் இன்றி கோவில் கடைகளின் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் சனிக்கிழமைதோறும் பெருமாள் கோயில்களில் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் துளசி மாலை, தேங்காய் பழம் வாங்கிச் செல்வார்கள். இதன்மூலம் கோயிலைச் சுற்றியுள்ள தேங்காய் பழம் கடைகளில் விற்பனை அதிகளவில் நடக்கும். ஆனால், தற்போது சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூர் பக்தர்கள் மட்டுமில்லாமல் உள்ளூர் பக்தர்கள் வருகையும் குறைந்து, கோயில் கடைகளில் விற்பனை குறைந்து, வியாபாரிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், பெரிய மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததுள்ளதால்,‌ பஜார் வீதிகளில் கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !