உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம் : கார்த்திகை ராசி பலன்

மிதுனம் : கார்த்திகை ராசி பலன்

மிருகசீரிடம் - 3, 4: அனைவரது கருத்துக்களையும் ஏற்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர பிரச்னை ஏதும் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் குறையும். அரசியல்துறையினருக்கு குழப்பங்கள் அகலும். தொண்டர்களின் வழியில் கூடுதல் செலவு ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்கால படிப்பு பற்றிய கவலை ஏற்படலாம். சக மாணவர்களுடன் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச.7
அதிர்ஷ்ட நாள்: நவ. 20
பரிகாரம்: அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும்.

திருவாதிரை: எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பம் கை கூடும். நண்பர்களின் மத்தியில் மரியாதை உயரும். மற்றவர்களிடம் பேசும் போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பணியாளர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி காண்பர். கடந்த காலத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். பெண்கள்  நிதானமாக பேசுவது நன்மையளிக்கும்.  பணவரவு  திருப்தி தரும் விதத்தில் இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது விழிப்புடன் இருப்பது அவசியம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
சந்திராஷ்டமம்: டிச.8
அதிர்ஷ்ட நாள்: நவ.22
பரிகாரம்: சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டம் தீரும்.

புனர்பூசம் - 1, 2, 3: துணிச்சலாக காரியங்களில் ஈடுபடும் அதே நேரத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிக்கும் குணமுடைய புனர்பூச நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனதில் தர்ம சிந்தனை அதிகரிக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான நல்ல விஷயங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வி, விளையாட்டுத்துறையில் வளர்ச்சி காண்பர். சகமாணவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச.9
அதிர்ஷ்ட நாள்: நவ.22, 23
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !