தேவிபட்டினம் நவபாஷானத்தில் நீரில் மூழ்கிய நவக்கிரகங்கள்
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் கடல் கொந்தளிப்பாக உள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து நவபாஷானத்தில், நவக்கிரகங்கள் கடல் நீரில் முழுமையாக மூழ்கின.தேவிபட்டினத்தில் நவபாஷானம் அமைந்துள்ளது. கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை பக்தர்கள் சுற்றி வந்து பல்வேறு பரிகார பூஜை செய்வர். குறிப்பாக முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜை செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவகிரகம் அமைந்துள்ள கடல் பகுதியான, வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்புடன், கடலின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரகங்கள் அனைத்தும் முழுமையாககடல் நீரில் மூழ்கி உள்ளன. 9 நவக்கிரகங்களும் முழுமையாக கடல் நீரில் மூழ்கி உள்ளதால், நவக்கிரகங்களை சுற்றியுள்ள நடைமேடை வழியாகவே பக்தர்கள் சுற்றி வந்து நவக்கிரக வழிபாடு செய்தனர்.