தம்பதி ஒற்றுமை சிறக்க...
ADDED :1408 days ago
மாங்கல்யபலம் வேண்டி அம்மனை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இதை தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மேற்கொள்வர். அதிகாலையில் நீராடி காலையில் விநாயகரை வழிபட்டு விரதத்தை ஆரம்பிப்பர். இதற்காக செந்நிற மலர்களான செம்பருத்தி, அரளிப்பூக்களால் அம்மன் படத்தை அலங்கரிப்பர். நைவேத்யமாக பால், வாழைப்பழம், வெற்றிலையுடன் பாக்கு படைத்து வழிபடுவர். விரதம் மேற்கொள்ளும் பெண்கள் ஒரு ஏழைக்காவது அன்னதானம் செய்து விரதத்தை நிறைவு செய்வர். இதன் பயனாக தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். தம்பதியர் ஒற்றுமை சிறக்கும்.