மலைக்கேணி அருகே சாமி சிலை உடைப்பு
ADDED :1380 days ago
செந்துறை: செந்துறை அருகே உள்ள மலைக்கேணி கீழ்ப்பகுதியில் கருப்பசாமி கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் மர்ம நபர்கள் சிலர் இரவில் சாமி சிலையை உடைத்துள்ளனர். இதனால் காலை கோயிலுக்கு வந்த பொதுமக்கள் சாமி சிலை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடமதுரை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.