பிரதமர் நீடூழி வாழ : ராமேஸ்வரத்தில் மிருத்யுஞ்சய யாகம்
ADDED :1380 days ago
ராமேஸ்வரம்: பிரதமர் மோடி நீடூழி வாழ வேண்டிய ராமேஸ்வரத்தில் பா.ஜ.,வினர் மிருத்யுஞ்சய யாகம் நடத்தினர். பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு அசாதாரண சூழல் ஏற்பட்டதால் சுற்று பயணம் ரத்தானது. இச்சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் மோடி நீடூழி வாழ வேண்டி நேற்று பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் தலைமையில், ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் 7 குருக்கள் மந்திரம் முழங்க மிருத்யுஞ்சய யாக பூஜை நடந்தது. இதில் பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் சுந்தரமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், நகர தலைவர் ராமநாதன், நகர் துணை தலைவர் ராமு, ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் மோகன், பலர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.