உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் கோவிலில் திருகல்யாணம் கோலாகலம்

வடபழநி ஆண்டவர் கோவிலில் திருகல்யாணம் கோலாகலம்

சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நடந்தது.

வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், வேத மந்திரங்கள் முழங்க அனைத்து ராஜகோபுர விமானங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் மாலை திருகல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மூலமஹாமந்த்ர ஜப பாராயணம், திருமுறைப்பாராயணம் மற்றும் நாத மங்கள இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !