சூலூர் கோவில்களில் சிவராத்திரி விழா
ADDED :1353 days ago
சூலூர்: சூலூர் வட்டார சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா துவங்கியது.
சூலூர் வட்டாரத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில், அரசூர் பரமசிவன் கோவில், சின்னியம் பாளையம் கணபதீஸ்வரர் கோவில், சூலூர் வைத்திய நாத சுவாமி கோவில், பள்ளபாளையம் சிவன் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் மற்றும் செலம்பராயம்பாளையம் அழகீஸ்வரர் கோவிலில் சிவன் ராத்திரியை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. முதல் கால அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.